Local

ஒன்றரை கிலோமீட்டருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்!

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பிற்கு அருகில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளார்.
பாராளுமன்ற  உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டி ஷாலிகா நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு. சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் பார்களுக்கு லைசென்ஸ் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் குடிப்பதை எப்படி நிறுத்துவது?என்னைப் போல் ஒரு துண்டு மீனையோ இறைச்சியையோ சாப்பிடாத 06 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading