Gossip

ஒரே நபர் மூலம் பிறந்த 67 குழந்தைகள்: பலருக்கு புற்றுநோய் என அதிர்ச்சி

ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய்

2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விந்தணு தானத்தின் மூலம் ஐரோப்பாவின் 8 நாடுகளில் 67 குழந்தைகள் பிறந்தன.

ஆனால், குறித்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட பிறகு, தங்கள் கருவுறுதல் மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டபோது தெரிய வந்தது.

rare cancer affect who born same donor

சுமார் 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களில் 23 குழந்தைகளுக்கு இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது.

அந்த குழந்தையில் 10 பேருக்கு புற்றுநோய் செல்களான லுகேமியா, ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா இருப்பது தெரிய வந்துள்ளது.

அரிய மாறுபாடு

இதன்மூலம் அரிய புற்றுநோய் அபாயம் உள்ள ஒரு ஆணின் விந்தணு பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் 2008ஆம் ஆண்டு விந்தணு நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாக தெரியவில்லை. மேலும் நிலையான ஸ்கிரீனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதைக் கண்டறிந்திருக்க முடியாது.

தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.

அத்துடன் ஒரு தானம் செய்பவரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நபரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

rare cancer affect who born same donor

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading