EntertainmentWorld

ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய 9 பேர் கின்னஸ் சாதனை!

பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர்.

இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த திகதி ஒரே நாளாகும்.

அதாவது ஒகஸ்ட் 1ஆம் திகதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.

இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை வைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி 20ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஒகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும்.

இவர்கள் 1991ஆம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர். மறுவருடம் ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார்.

அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்பும் ஒகஸ்ட் 1ஆம் திகதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதியினர் கூறினார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading