Cinema

ஒஸ்கர் விருது விழாவில் கன்னதத்தில் அறைந்த நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை!

ஒஸ்கர் விருது மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ் ராக்கை மேடையிலேயே நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது.கறுப்பு அத்தியாயமாக பதிந்துவிட்டது. மனைவியின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித், யாரும் எதிர்பாராத வகையில் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்காக பின்னர் மன்னிப்பு கேட்டதுடன் ஒஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியையும் வில் ஸ்மித் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக விசாரித்த அகாடமி அமைப்பு, ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளன. ஒஸ்கர் மேடையில் ஸ்மித் வெளிப்படுத்திய நிகழ்வு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி என்றும் அகாடமி தெரிவித்துள்ளது.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading