Local

ஓடிக் கொண்டிருந்த பொலிஸ் வண்டியில் இருந்து பாய்ந்த நபர் பலி!

ஓடிக் கொண்டிருந்த பொலிஸ் வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான வாகனத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து உப பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை சரியான முறையில் கையாளவில்லை என்பதால் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்ட, 47 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்படும் போது, குறித்த நபர் பொலிஸ் வாகனத்தில் இருந்து வெளியே பாய்ந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading