Gossip

கஞ்சா புகைப்பதற்காக வெட்டப்பட்ட ஆணுறுப்பு!

நபர் ஒருவர் தனது ஆண் உறுப்பை தானே துண்டித்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

கஞ்சா – புகைப்பழத்திற்கு அடிமையான நபரொருவர் கடந்த 3 மாதங்களாக  கஞ்சா புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ள நிலையில், அண்மையில் மீண்டும் கஞ்சாவைப்  புகைத்துள்ளதாகவும், இதன் போது அவருக்கு பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பில் விறைப்பும் வலியும்  ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வலியை போக்க அவர் கத்தரிக்கோலால் தனது ஆணுறுப்பை முழுவதுமாக துண்டித்துள்ளதாகவும்,  இரண்டு மணிநேரம் சென்ற நிலையில்,  இரத்தம் நிற்கவில்லை எனவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  வைத்தியசாலையில்   அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டதுடன் , அவரது விதைப்பையிலும் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் , 2 செ.மீ. மட்டுமே ஆண்குறி சதை மீதம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள் ”கடந்த 20 ஆண்டுகளில் மனநல பாதிப்பு காரணமாக ஆண்கள் தங்களது பிறப்புறுப்பை சிதைத்துகொள்வது தொடர்பாக 100 சம்பவங்கள் வரை நடைபெறுள்ளன எனவும், எனினும், கஞ்சா போதையால் ஏற்பட்ட மனநல பாதிப்பால் ஆணுறுப்பை சிதைத்துகொள்வது என்பது மிகவும் அரிது ”எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading