கடவுச்சீட்டு மோசடியில் சிக்கிய டயனா!

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
டயமான கமகே பிரித்தானிய பிரஜையாக இருக்கும் போது குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளரிடம் பொய்யான தகவல்களை முன்வைத்து இரண்டு கடவுசீட்டு பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் முன்வைக்காதது தொடர்பில், தகவல் முன்வைப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் தடுப்புப் பணியகத்தின் நிலையத் தளபதிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைக்காத காரணத்தினால், நீதிவான் இந்த விடயம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரண்டு வருடங்கள் கடந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபரை கைது செய்யவில்லை என சட்டத்தரணிகள் மனுவொன்றை தாக்கல் செய்து நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
