Local

கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கை மக்கள்காக அமெரிக்க அரசாங்கம் மூன்றாவது தவணை புதிய நிதியுதவியை இன்று அறிவித்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவியாக 5.75 மில்லியன் அமெரிக்க டொலர்ககளை வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பண உதவி, குறுகிய கால வேலைகள் மற்றும் விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை நேரடியாக வழங்குவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“இன்று நாங்கள் அறிவிக்கும் புதிய உதவி, சில சிக்கல்களைத் தீர்க்கும். இந்த நெருக்கடியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிதி நேரடியாக சென்றடைவதை உறுதிசெய்ய நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading