Local

கட்டார் தொண்டு நிறுவனம் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

கட்டார் தொண்டு நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனது டுவிட்டர் பதிவில், “கட்டார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று (29) சந்தித்தேன். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அறக்கட்டளையின் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது”

இலங்கை அதிகாரிகள் ‘கட்டார் அறக்கட்டளை’ ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று பெயரிட்டனர் மற்றும் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் முக்கிய வழக்கு தொடர்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக தொண்டு நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்படடிருந்தது.

2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட, அந்த தொண்டு நிறுவன நிதியின் மீதான தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading