Local

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் செய்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

சென்னையில் இருந்து கொழும்பு வழியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருவதற்காக அவர்கள் அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்பேர்ன்  நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading