Local

கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் முடக்கம்!

தற்போது நடைமுறையில் இருக்கும் சுகாதார கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து மீறுவார்களாயின் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு செல்வதற்கு அரசு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இதன்படி ,மாகாண ரீதியான பொது போக்குவரத்து இன்று தளர்த்தப்பட்டபோதும் பலர் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டுள்ளனர்.அதேசமயம் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்நிலையில் ,கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில் , சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை மக்கள் மீறினால் விரைவில் பொதுமுடக்கத்தை அமுல்படுத்துவதென அரசு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

மேலும் ,இப்போதைய நிலையில் நாட்டை முழுமையாக திறப்பது நிலைமையை மேலும் மோசமாக்குமென சுகாதார அதிகாரிகள் அரசை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading