Local

கணவனுக்கு பூனை மீது அதிக பாசம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட மனைவி!

கம்பஹா பிரதேசத்தில் வீட்டில்  வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மீது கணவர் அதீத பாசம் வைத்துள்ளதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

முறைப்பாட்டையடுத்து,  மினுவாங்கொட பொலிஸார்,  கணவன் , மனைவி இருவரையும் கம்பஹா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்துள்ளனர். 

கம்பஹா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் ஆலோசனையின்படி இத் தம்பதியினரை மனநல வைத்திய நிபுணரிடம் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading