Local

கணவனை கொல்ல வந்த துப்பாக்கிதாரிகள் மனைவி பலி!

மத்துகமை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) இரவு குறித்த பெண்ணின் கணவரை கொலை செய்வதற்காக குறித்த சந்தேகநபர்கள் மத்துகமை, பாலிகா வீதியிலுள்ள குறித்த வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஆயினும் இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்து அவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்தில் T56 வகை 6 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனனர்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணைகள் மத்துகம நீதவானினால் மேற்கொள்ளப்பட்டு, சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பிலான விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading