Local

கதிர்காமத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்ட காதல் ஜோடி!

கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும், உழவு இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் ஜோடி, பலியாகியுள்ளது.

இவ் விபத்தில் வல்லவ விதானகே ரிசித குமார ( 24 வயது) மற்றும் களுதுருகே லக்சானி (19வயது ) ஆகியோரே உயிரிழந்தனர்.

இவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் முடித்துள்ளனர். இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் கலஹிட்டிய பிரதேசத்தில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழமை. அந்த வகையில் கடந்த வாரம் தமது உறவினர் வீட்டிற்கு சென்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.

கலஹிட்டிய வீதியில் வந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. உழவு இயந்திரத்தின் பிரதான மின் விளக்குகளில் ஒன்று செயலிழந்துள்ள நிலையில், ஒற்றை விளக்குடன் உழவு இயந்திரம் பயணித்துள்ளது. எதிரே வருவது மோட்டார் சைக்கிள் என நினைத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பயணித்ததாலேயே விபத்து நேர்ந்ததாகவும், மின்வெட்டால் வீதி விளக்குகளும் எரியாததால் , எதிரே வந்த உழவு இயந்திரத்தை அவர்களால் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து பயணித்த யுவதி, தூக்கி வீசப்பட்டு , உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞனும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழந்துள்ளார். இருவரினதும் சடலங்கள் கந்த வீதியில் உள்ள இளைஞனின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading