Local

கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 340 மில்லியன் ரூபா செலவு!

நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு 340 மில்லியன் ரூபாய் செலவினங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கணக்கறிக்கையை சட்டத்தரணிகள் வாயிலாக குறித்த கப்பல் உரிமையாளரின் சட்டத்தரணிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதேவேளை கடல் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைவாக நிவ் டயமண்ட் கப்பலின் தலைவரை நீதிமன்றில் நிறுத்த ஆவண செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading