Local

கப்பலில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது!

MT New Diamond எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலானது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த எண்ணெய்க் கப்பல் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பலின் தீப்பரவல் தொடர்பில் மீளாய்வு செய்து ஆலோசனை வழங்க சட்டமா அதிபர், கடற்படை தளபதி உள்ளிட்ட MEPA நிறுவனத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதவிர, கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளனர்.

குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading