Local

கம்பஹா, களுத்துறை, திருகோணமலை இன்று இரவு முதல் தனிமைப்படுத்தலில்

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொல்ஹேன, ஹீரலுகெதர, கலு அக்கல மற்றும் அஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மிரிஸ்வத்த மற்றும் பெலன்வத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், குறித்த அனைத்து பகுதிகளும் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading