Local

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்!

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 2000 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, 7,500 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகும் டெங்கு அபாயகரமான பிரதேசமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 57 சுகாதார பிரிவுகள் கடந்த வாரம் வரை டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

2 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading