World

கர்ப்பிணி மனைவிக்கு `HIV’ ரத்தத்தை ஊசிமூலம் செலுத்திய கணவர்!

இந்தியாவில் கர்ப்பிணி மனைவியை விவாகரத்து செய்வதற்காக அவர் உடலில் ’HIV’ ரத்தத்தை ஊசிமூலம் கணவர் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி மனைவி அளித்த புகார்

ஆந்திரா மாநிலத்தின் தாடேபல்லே நகரை சேர்ந்தவர் எம். சரண் (40). இவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,  திருமணத்துக்குப் பிறகு நானும் என் கணவர் சரணும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் எங்களுக்குள் பிரச்னை வர ஆரம்பித்தது. அடிக்கடி வரதட்சனை பணம் கேட்டும், ஆண் குழந்தை வேண்டும் எனவும் அடித்து துன்புறுத்துவார். இதற்கிடையில் நான் கர்ப்பமானேன்.

ஆனால், என் கணவருக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் எனது ஆரோக்கியத்துக்காக ஊசி போடவேண்டும் என கூறி எனக்கு HIV பாதித்த ரத்தத்தை செலுத்தியிருக்கிறார். எனக்கு உடல்நலப் பரிசோதனை நடந்தபோதுதான் எனக்கு HIV இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சரணிடம் பேசியபோது, ​​கர்ப்ப காலத்தில் எனனக்கு HIV வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். தன்னை விவாகரத்து செய்யும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறார் என தெரிவித்தார். புகாரை தொடர்ந்து பொலிசார் சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading