LocalUp Country

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவி சிங்கள பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

 

 

( கற்பிட்டி – எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 06 ல் தமிழ் ழொழி மூலம் கல்வி கற்கும் மாணவி எம். நசீம் ஆயிஷா மனால் இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் , மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தற்போது தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழை தாய் மொழியாக கொண்டு கல்வி கற்க்கும் மாணவி எம்.நசீம் ஆயிஷா மனால் இரண்டாம் மொழி சிங்கள பேச்சு போட்டியில் மாவட்ட, மாகாண போட்டிகளில் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.

இம் மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர்களான பவானி மற்றும் பரீன் இல்ஹாம் ஆகியோருடன் பெற்றோர்களான எம். நசீம் எம். ஏ.இஸட் மபாஸா ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் முஸ்தபா அன்சார் குறிப்பிட்டதுடன் இன்ஷா அல்லாஹ் தேசிய மட்டத்திலும் வெற்றி பெறுவதற்கு இறைவன் துணைபுரிய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading