Local

கல்முனை food city இல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசம்!

கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் food city இல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசமானது.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸார், மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன் சுமார் ஒரு மணி நேரத்தின் பின் தீவிர முயற்சி காரணமாக தீ மேலும் பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது நாசகார செயற்பாட்டுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading