Gossip

கள்ளத்தொடர்பு வைத்திருந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்கள்!

மண்ணச்சநல்லூர் அருகே வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த தந்தையை அவரது மகன்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெடுங்கூர் மேல தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் சுப்ரமணி(50 ). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்தகுமார் மற்றும் வினோத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் அரவிந்தகுமார் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 2ஆம் தேதி சொந்த ஊரான நெடுங்கூருக்கு வந்துள்ளார்.வினோத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணிக்கு அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் கடந்த 7 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி சாந்தியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார் சுப்ரமணியன்.

இந்நிலையில் தீபாவளியன்று தன் தந்தையை வீட்டுக்கு வரும்படி மகன்கள் அரவிந்த் மற்றும் வினோத் போய் கூப்பிட்டு உள்ளனர் அப்போது சுப்பிரமணிக்கும், மகன்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் அரவிந்தகுமார் மற்றும் வினோத் தந்தை சுப்பிரமணியத்தை அரிவாள் மற்றும் இரும்பு பைப்பால் தாக்கியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவிப் பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த் குமார் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading