World

காசாவில் உடனடி போர் நிறுத்தம்! அமெரிக்கா தீர்மானம்!!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இஸ்ரேல் – காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழைவதையும் தடுத்தது. இதனால் காசாவில் உள்ள மக்கள் உணவுக்கு போராடும் நிலை ஏற்பட்டது. உணவு விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் இறந்தனர்.

இந்த நிலை தொடர்ந்ததால், காசாவில் உணவு பொருட்களை விநியோகித்த அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை அமைப்பு தனது பணியை நிறுத்தியது. இதையடுத்து , காசாவில் உடனடி போர் நிறுத்தம் அமல்படுத்த கோரி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

அதில், காசாவில் மனிதாபிபானம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், அங்கு உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள 21 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் வகையில் அனைத்து தடைகளையும் இஸ்ரேல் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading