World

காதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி

அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண் ஒருவர் தனது காதலன் மீதான கோவத்தில் அவர் மீது அமர்ந்து மூச்சடைக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விண்டி தாமஸ் என்ற 44 வயது பெண் ஒருவர் தனது காதலன் கீனோ பட்லர் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் மது அருந்தியுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விண்டி பட்லரை கோவத்தில் அடிவயிற்றில் குத்தி கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி அமர்ந்துள்ளார். இதனால் மூச்சு விட முடியாமல் பட்லர் திணற ஆரம்பிக்கவே விண்டி மேலும் அவரை அழுத்தியுள்ளார். இதனால் பட்லர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அந்த குண்டு பெண்ணைக் கைது செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் பட்லரை விண்டி வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், எதிர்பாராதவிதமாக இது நடந்து விட்டதாக விண்டியின் வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால் பட்லரை அடித்து உதைத்த பின்னரே இந்த சம்பவம் நடந்தது. ஆகவே அவர் தரப்பு வாதத்தை ஏற்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. விண்டிக்கு 18-லிருந்து 36 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விண்டியின் எடை 136 கிலோ (300 பவுண்ட்) என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading