Gossip

காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்த இளைஞர்!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பண்டா கிராமத்தில் வசிப்பவர் சந்தீப் ஓராவன். இவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையில், மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தீப் வேலைக்கு சென்றுள்ளார்.

அந்த வேலைக்காக சுவாதி குமாரி என்பவரும் வந்துள்ளார். ஒருவரை ஒருவர் சந்தித்துகொண்ட இருவரும் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து உள்ளது. வேலைக்கு முடிந்து சென்ற பின்னும் காதல் மழையை பொழிந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு தெரிய வர முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் தொடர்ச்சியாக நீடித்து வந்ததை அடுத்து, கிராமத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது.

இதில், 2 பெண்களையும் சந்தீப் மணம் முடிக்க வேண்டும் என தீர்ப்பு முடிவானது. ஆனால், இதற்கு அந்த 2 பெண்களோ அல்லது குடும்பத்தினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதனால் 3 பேரின் ஒப்புதலுடன், நடைமுறையில் இல்லாத இந்த திருமணம் பண்டா கிராமத்தில் இனிதே நடந்து முடிந்தது.

இதுகுறித்து சந்தீப் தெரிவிக்கையில், 2 பெண்களை ஒன்றாக திருமணம் செய்வதில் கூட சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் இரண்டு பேரையும் நான் காதலிக்கிறேன். அவர்கள் இருவரில் ஒருவரை கூட என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading