Gossip

காதலியை கொலை செய்த கோவில் பூசாரி!

தெலுங்கானா, மாநிலம் ஐதராபாத் – ஷரூர்நகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சாய் கிருஷ்ணா . கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருவதோடு அதே பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

நற்குடா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய அப்சரா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து உடலை மணலால் மூடி மறைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்று பொலிஸிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading