Gossip

காதல் திருமணம் செய்ய 72 வயது மூதாட்டியை கொலை செய்த 17 வயது சிறுமி!

17 வயது சிறுமி ஒருவர் 72 வயது மூதாட்டியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி(72). இவருக்கு செந்தில்வேல் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.

அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மூதாட்டி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.

கழுத்தை நெறித்து கொலை

வீட்டுக்கு வந்து செந்தில்வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிக்கிய 17 வயது சிறுமி

கண்காணிப்ப கேமரா காட்சிகள் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்று ஒரு மணி நேரமாக திரும்பி வராதது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டதால், மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சிறுமி திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading