Gossip

கார் மீது உட்கார்ந்து புகைப்படம் எடுத்த மணப்பெண் மீது வழக்குப் பதிவு!

கார் ஒன்றில் அட்டகாசமான மேக்கப்புடன் போட்டோஷுட் நடத்திய மணப்பெண் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்தில் கூட சில விதிமுறைகளை அரசு விதித்துள்ளது.
குறிப்பாக திருமணத்தில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணியவேண்டும் என்பது முக்கியமான விதிமுறை.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் மணப்பெண் அலங்காரத்துடன் ஸ்கார்பியோ கார் பானெட்டில் அமர்ந்தபடி வலம்வர, போட்டோகிராபர் அந்த பெண்ணை வீடியோ எடுக்கிறார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், மணப்பெண் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எந்தவிதமான கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் போட்டோஷூட் நடத்தப்பட்டதால், மணப்பெண், கார் ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் போட்டோஷூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கமெராவையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading