கிரிபத்கொடை நகரில் புதிய நவநாகரிக காட்சியறையை திறந்து வைத்துள்ள NOLIMIT
இலங்கையில் முன்னணி நவநாகரிக ஆடையணி விற்பனைச் சங்கிலியாகத் திகழ்ந்து வருகின்ற நோலிமிட், நாடெங்கிலும் தொடர்ந்து அகலக் கால்பதித்து வருகின்ற நிலையில், தனது 29வது வியாபார மையத்தை கிரிபத்கொடை நகரில் திறந்து வைத்துள்ளது. இந்த வர்த்தகநாமம் தற்போது முன்னெடுத்து வருகின்ற வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைற்கல்லாக இது மாறியுள்ளது. கிரிபத்கொடை மாகொல வீதியிலுள்ள உதேஷி சிட்டி ஷொப்பிங் கொம்பிளெக்ஸிலுள்ள G-3 ல் திறக்கப்பட்டுள்ள, நான்கு மாடிகளைக் கொண்ட இப்புதிய வியாபார மையம் 21,000 சதுர அடிக்கும் மேலான இட வசதியைக் கொண்டுள்ளது. நவீன, தாராளமான இட வசதி கொண்ட, மற்றும் சௌகரியமான ஷொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறுகின்ற புறநகர மையங்களில் ஒன்றாக மிகவும் கேந்திர முக்கியத்துவம் நகரமாக கிரிபத்கொடை காணப்படுகின்றது. அந்த வகையில் கிரிபத்கொடை நகரை அண்டியுள்ள குடும்பங்கள், தொழில்புரியும் இளைஞர்,யுவதிகள், மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் இவ்வியாபார மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடவர், மகளிர், மற்றும் சிறுவர்களுக்கான ஆடையணிகள், பாதணிகள், அணிகலன்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பிரயாணம் மற்றும் பிரயாணப் பொதிகள் சார்ந்த தயாரிப்புக்கள், மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்ற விசாலமான ஆடையணிகள் மற்றும் பொருட்களை இப்புதிய வியாபார மையத்தில் கிடைக்கப்பெறுவதுடன், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சிவாய்ப்புக்களை உயர்வாகக் கொண்டுள்ள புறநகரங்கள் மற்றும் பிராந்திய சந்தைகளில் தனது வலையமைப்பை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்கள் இலகுவாக செல்வதையும், பெற்றுக்கொள்ளும் சௌகரியத்தையும் மேம்படுத்துவதில் நோலிமிட் நிறுவனத்தின் நீண்ட கால மூலோபாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள இவ்வியாபார மையம் அமைந்துள்ளது. தாராளமான வாகனத் தரிப்பிட வசதி, இலகுவாக சென்றுவரக்கூடிய இடத்தில் அமைந்துள்ளமை, குடும்பமாக சென்று அனுபவிக்கக்கூடிய வடிவமைப்புடனான சூழல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இவ்வியாபார மையம், தராதரம் மிக்க வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் தனித்துவம் கொண்ட வர்த்தகநாமத்தின் துணையுடன் தங்குதடையற்ற கொள்வனவு அனுபவத்தை வழங்குகின்றது. 1992ம் ஆண்டில் இயங்க ஆரம்பித்த நோலிமிட், நாட்டின் மிகப் பாரிய வியாபாரச் சங்கிலியாக பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், உள்நாட்டில் வலுவாகக் காலூன்றியுள்ளதுடன், சர்வதேச ரீதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திலும் விரிவடைந்தவண்ணம் உள்ளது.
நோலிமிட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஹஃபிஸ் முபாரக் அவர்கள் இதனைத் திறந்து வைத்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “துடிதுடிப்பான, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆவல் கொண்ட, மற்றும் வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற சமூகத்துடன், இலங்கையில் மிகுந்த வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்ட புறநகரங்களில் ஒன்றாக கிரிபத்கொடை காணப்படுகின்றது. எமது 29வது வியாபார மையத்தை இங்கு திறந்து வைத்துள்ளமை மூலோபாயாரீதியாக விரிவாக்கும் எமது குறிக்கோளையும், வர்த்தகரீதியாக இப்பிரதேசத்தின் வளர்ச்சி வாய்ப்புக்களையும் பிரதிபலிக்கின்றது. இப்பிரதேசத்திலுள்ள குடும்பங்களுக்கு தரமான, தற்காலத்துக்கு அமைவான நவநாகரிக ஆடையணிகளை மிகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுத்து, கிரிபத்கொடை நகரில் அதிநவீன வியாபார மையத்தைத் திறந்து வைத்துள்ளமை எமக்குப் பெருமையளிக்கின்றது.”
நோலிமிட் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் திரு. றனீஸ் ஷெரீஃப் அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது வளர்ச்சிப் பயணத்தில் கிரிபத்கொடை நகரமும் மிக நீண்ட காலமாகவே மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகக் காணப்பட்டது. அண்டையிலுள்ள சமூகங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பரந்த வகைப்பட்ட ஆடையணிகள் மற்றும் பொருட்களுடன் சிறப்பான சேவையை வழங்குவதற்கு இப்புதிய வியாபார மையம் எமக்கு இடமளிக்கின்றது. மேலும், இலங்கையில் மிகவும் அதிகமாக நேசிக்கப்படுகின்ற நவநாகரிக வியாபார வர்த்தகநாமமாக மாற வேண்டும் என்பதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.”
நோலிமிட் நிறுவனம் இலங்கையில் தொடர்ந்தும் அகலக் கால்பதித்து வருகின்ற நிலையில், இவ்வர்த்தகநாமத்தின் மிகச்சிறந்த வியாபார விரிவாக்கம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவநாகரிகத்தை இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு மற்றுமொரு சான்றாக கிரிபத்கொடை வியாபார மையம் காணப்படுகின்றது.

You must be logged in to post a comment.