கிறிஸ்தவர்கள் 262 பேரை காப்பாற்றிய முஸ்லிம் இமாம்..!!
83 வயசுல ஒரு மனுஷனால என்ன பண்ண முடியும் தெரியுமா?
2018 ஜூன் மாசம். நைஜீரியாவுல பிளாட்டோ மாநிலம், Nghar-ங்கிற கிராமத்துல திடீர்னு பதற்றமான சூழ்நிலை உருவாச்சு. உயிரை காப்பாத்திக்க ஓடி வந்த 262 கிறிஸ்தவர்களுக்கு இமாம் அபுபக்கர் அப்துல்லாஹி தன்னோட மசூதியோட கதவையும், வீட்டையும் திறந்து விட்டாரு.
கொஞ்ச நேரத்துல ஆயுதங்களோட வந்தவங்க அவர் வீட்டு வாசலுக்கே வந்துட்டாங்க.
அப்போ அந்த 83 வயசு பெரியவர் கொஞ்சம் கூட பயப்படாம வாசல்லயே நின்னு, “உள்ள இருக்குறவங்க எல்லாரும் முஸ்லிம்கள் தான்”னு உறுதியா சொல்லிட்டாரு. அவங்க அங்கிருந்து கிளம்பி போயிட்டாங்க.
உள்ள இருந்த 262 பேரும் பத்திரமா உயிரோட வெளிய வந்தாங்க.
அவர் கையில எந்த ஆயுதமும் இல்ல, துணைக்கு யாரும் இல்ல. இருந்ததெல்லாம் மனிதநேயம் மட்டும் தான். மதத்தை விட மனுஷ உயிர் தான் பெருசுன்னு செயல்ல காட்டிட்டாரு.
இந்த துணிச்சலுக்காக 2019-ல அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கும் International Religious Freedom Award அவருக்கு கிடைச்சது.
262 உயிர்கள். வாசலில் நின்ற ஒரே ஒரு மனிதர். கருணை இல்லாத நம்பிக்கை வெறும் வார்த்தை தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் ❤️
#HumanityFirst #RealLifeHero #FaithInHumanity #InspirationalStory

You must be logged in to post a comment.