Local

கிறிஸ்மஸ் தினத்தில் மதுபான விற்பனையை தடை செய்ய வேண்டும்!

வெசாக் உற்சவத்தின் போது மதுபான விற்பனை தடைசெய்யப்படுமானால் நத்தார் பண்டிகையிலும் அதனை தடைசெய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மதம் என்பது விருந்துகளை ஏற்படுத்துவது மற்றும் மதுபானம் அருந்தி உயிர்களை அழித்துக்ெகாள்வதல்ல என தெரிவித்துள்ள பேராயர், மதம் என்பது மிக உன்னதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு நத்தார் தினத்தில் மதுபான விற்பனைக்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு கோரும் செய்திகளை தாம் பத்திரிகைகளில் காணக்கிடைத்ததாகவும் அதற்கிணங்க அன்றைய தினத்தில் அதற்கான அனுமதியை வழங்கி மதுபானம் அருந்தி உயிர்களை அழித்துக்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிப்பது சுபீட்சத்தின் நோக்காகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading