Lead NewsLocal

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் – மேல்மாகாணத்தில் அசாத் சாலி ! ரணிலின் எதிரிக்கும் பதவி!

கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலியும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் பதவியை பெறுவதற்காக ஹில்புல்லா எம்.பி. பதவியை துறந்துள்ளார்.

அத்துடன்,  வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும்,  மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்னவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்னவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக  விமர்சித்துவரும் மைத்திரி குணரட்னவுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading