World

குப்பைகளில் வீசப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் உற்பத்தி!

ஜப்பானில் வீணாகும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிப்பதில் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

கட்டுமானத்திற்கு முக்கியமான கான்க்ரீட் தயாரிப்பதற்கான தற்போதைய செயல்முறைகளால் சுற்றுசூழல் பாதிக்கும் வாயுக்கள் வெளியேறப்படுகின்றன.

எனவே சிமெண்டுக்கு மாற்றாக சூழ்நிலைக்கு கேடு விளைவிக்காத ஒன்றை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.

வீடுதோறும் வீணாக்கப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.  

வீணாக வீசப்படும் உணவுகளில் 3 நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை உறுதியான சிமெண்டாக மாற்ற முடியும் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

உணவுப் பொருட்கள் அழுகுவதால் சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியாகும் வெளியாவதும் இதனால் குறையும் என்பதால் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முடிவு கட்ட இயலும் என்று அவர்கள் கூறினர்.

தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி விரைவில் முழுமை அடையும் என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading