Local

குறைந்த வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் உள்ளே நான் வெளியே!

எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாகவும் தமிழர் மகா சபை சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடிய வேளை மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் எனக்கு எதிர்காலத்தில் பாரிய சவால் இருக்கின்றது. நான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக்கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் சபதம் செய்கின்றேன் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading