World

குழந்தை பெற்றுக் கொண்டால் சலுகை தருவதாக அறிவிப்பு!

தென்கொரியா நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்நாட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது.

உலகின் பல நாடுகளில் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது.

தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அந்த நாட்டு இளைஞர்களை திருமணம் செய்ய கோரி அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே தென்கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

குழந்தை பெற்றால் உதவி தொகை
தென்கொரியா நாட்டில் முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு $1500 டொலர் வழங்கப்படுவதாக கடந்த 2022 ஆம் ஆண்டே அறிவித்திருந்தது.

இதனுடன் சேர்த்து தற்போது புதிதாக பல சலுகைகளை வழங்கியுள்ளது. தென் கொரியாவின் அரசாங்கம் 1 வயதுக் குழந்தைகளின் பராமரிப்புக்காக சுமார் $528 டொலர்களை வழங்குகிறது.

இதற்குப் பிறகு, குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் $264 டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை தொடர்வது குறித்து அரசு ஆலோசனை செய்துள்ளது.

புதிய திட்டத்தின் படி 1 வயது வரையிலான குழந்தைக்கு $755 டொலர்களும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, $377 டொலர்களும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதே போல் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளும் மக்கள் தொகை குறைபாட்டை கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading