World

கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 79 மாணவர்கள் விடுவிப்பு

கேமரூனில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் திங்கள் கிழமை உள்ளே புகுந்தனர்.
அங்கு படித்து வந்த 10–14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 79 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், டிரைவர் ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
82 பேரும் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தொடர்ந்து 7–வது முறையாக வெற்றி கண்ட பால் பியா நாளை பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading