Local

கொச்சிக்கடை தேவாலயத்தில் புனரமைப்பு பணி ஆரம்பம்

நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

பொலிஸார் மற்றும் முப்படைகளின் முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப் பகுதி வரை குறித்த பகுதி அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்குள் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளின் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் சில தினங்களில் இந்த புனரமைப்பு பணிகள் நிறைவடையும் என பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

அதன்பின்னர், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading