Lead NewsLocal

தௌஹீத் ஜமா அத் உட்பட 2 அமைப்புகளுக்குத் தடை! – சொத்துகளும் முடக்கம்; ஜனாதிபதி அதிரடி

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளையும் அவசரகாலச் சட்டத்திலுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்துள்ளார்.

இனிமேல் இந்த இரு அமைப்புகளும் இலங்கையில் செயற்பட முடியாது எனவும், அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயற்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading