Local

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்: மஹிந்த அணி உறுப்பினரும் வாள், கத்தியுடன் கைது!

உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் அன்சார் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் அவரைத் தாம் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து வாள், கத்தி மற்றும் 38 செல்போன் மின்கலங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொஹமட் அன்சார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிட்டுத் தெரிவுசெய்யப்பட்டவர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading