Lead NewsLocal

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயங்களுடன் தப்பினார்கள் சஹ்ரானின் மனைவியும் மகளும்!

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவியும் குழந்தையும் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்று சொல்லப்படும் சஹ்ரான் ஹாசீம் அந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாசீம் மதனியா, சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

அவர்களை அடையாளம் காட்ட வருமாறு தம்மிடம் கோரப்பட்டது எனவும், ஆனால் தம்மால்போகக் கூடிய சாத்தியம் இருக்குமோ தெரியவில்லை எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading