கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 145,456 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,181,027 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 547,014 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,602 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,514 பேர் குணமடைந்தனர்.
- தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.
- அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,607 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 677,466 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,164 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,170 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168,941 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 525 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,315 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 184,948 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 503 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,920 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,027 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 753 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,729 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103,093 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 861 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,869 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,995 ஆக அதிகரித்துள்ளது.
- பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,857 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,809 ஆக அதிகரித்துள்ளது.
- ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,052 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137,698 ஆக அதிகரித்துள்ளது.
- நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,315 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,214 ஆக அதிகரித்துள்ளது.
- சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,341 ஆக அதிகரித்துள்ளது.
- துருக்கியில் 1,643 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,281 பேரும், பிரேசில் நாட்டில் 1,947 பேரும், சுவீடன் நாட்டில் 1,333 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
- கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,191 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
…
