Local

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரமாக  அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில்  சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  125 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading