World

கொரோனாவால் மீண்ட சிலர் கண் பார்வையை இழந்துள்ளனர்!

கொரோனா தாக்குதல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மீண்ட சிலர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கண் பார்வையை இழந்துள்ளனர். அதாவது கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கொரோனாவிலிருந்து வெளியே வருகின்றனர். ஆனால் அதன்பின்னர் இரு வாரங்களில் அவர்கள் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீராய்டு அதிகளவில் செலுத்தப்படுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் கண் வலி, கண் வீக்கம், பார்வை இழப்பு ஏற்படும். பாதிப்பு அதிகரிக்கும் போது மூளையையும் பாதிக்கும். ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் ஏற்படும் அப்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் மூக்கில் பிரச்சினை ஏற்படும், சைனஸ் பிரச்சினை ஏற்படும். ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அடைப்பு ஏற்படும் பகுதிகளில் உறுப்புகள் செயலிழக்கும் என்று மருத்துவர் ராயப்பா கூறியுள்ளார். இந்த நிலையில் மராட்டியத்தில் 52 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்து ள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading