Local

கொரோனாவால் 2 ஆவது தடவையும் முடக்கப்பட்டது பிரிட்டன்!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவை இரண்டாவது தடவையாக முடக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலங்களில் 326 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 21 ஆயிரத்து 915 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பிரிட்டனில் இதுவரை 46 ஆயிரத்து 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பிரான்சும் இரண்டாவது தடவை முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading