Local

கொரோனாவை தொடர்ந்து பரவுகிறது பறவை காய்ச்சல்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆங்காங்கே பறவைகள் செத்து விழுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா  பீதி ஒரு புறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மறுபுறம் திருவனந்தபுரம்,  பாலக்காடு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. பாதிப்பு உள்ள பகுதிகளில் பறவைகளை பாதுகாப்பாக அழிக்கும் பணி கேரள அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு  கொண்டு வரப்பட்ட வாத்து குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அறிந்த கால்நடை பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று இறந்த வாத்துகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த வாத்து குஞ்கள் பாதுகாப்பாக குழிகளில்  போட்டு எரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் எம்எல்ஏ விடுதி அருகே மரத்தில்  பறவைகள் திடீர் என்று செத்து விழுந்தன.

இதை அறிந்த மருத்துவ குழுவினர் விரைந்து வந்து இறந்த பறவையை ஆய்விற்கு கொண்டு சென்றனர். தீயணைப்பு துறையினர் இறந்த பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். கோழிக்கோடு  முக்கம் பகுதியில் வவ்வால்கள் கூட்டம்  கூட்டமாக செத்து விழுந்தன. இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்நடை  பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சம்பவ இடம் சென்று வவ்வால்களை பரிசோதனைக்காக  கொண்டு சென்றனர். திருவனந்தபுரம்   மலையின்கீழ் பகுதியில் குரங்குகள் திடீர் திடீரென மயங்கி விழுந்தது   பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறையினர்  சம்பவம் இடம் சென்று  மயங்கி கிடந்த ஒரு குரங்கை பரிசோதனைக்காக எடுத்து  சென்றனர். பறவை காய்ச்சல் பீதியால் இறைச்சி கோழி, வாத்து, முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading