Local

கொரோனா தொற்றாளர் ஒருவரை கைது செய்ததை தொடர்ந்து இறுபது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்ததை தொடர்ந்து, 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொஸல்வத்தை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசாரும், அந்த பகுதியிலுள்ள சோதனைச்சாவடியிலுள்ள பொலிசாருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதே, அவர் அண்மையில் அடையாளம் காணப்பட்ட கொரொனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்குள்ளாக்கப்படுவதுடன், அவரை கைது செய்து, விசாரணை நடத்திய சுமார் 20 பொலிசார் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு சாந்தர் பிளேஸிலுள்ள போதைப்பழக்கமுடைய துப்பரவு தொழிலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தார்.

அட்டிட்டிய பகுதியிலுள்ள முன்மொழியப்பட்ட பொலிஸ் பல்கலைகழகத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading