Local

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு!

குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு இவ்வாறு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் குறித்த தரப்பினர் கலந்து கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று (18) தொற்று உறுதிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading