Local

கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1300 ஐ தாண்டியது!

நாட்டில் இன்றைய தினம் 1,331 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,595 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,205 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading