Local

கொலை செய்யப்பட்டவர் கொழுப்பு புதுக்கடையை‌ சேர்ந்த இர்ஷாத் என அடையாளம் காணப்பட்டார்!

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை வனவாசல பொசொன்வத்த பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்கடையை சேர்ந்த மொஹமட் இர்ஷாட் என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பணப் பிரச்சினை காரணமாக நண்பர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று கிரேன்பாஸ் பிரதேசத்தில் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை கொலை செய்து வனவாசல பொசொன்வத்த பிரதேசத்திற்கு மோட்டார் வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேலியகொடை குற்றப் பிரிவு மற்றும் களனி குற்றப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகள் சிலவற்றை பொலிஸார் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading