Local

கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதியுதவி!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து ரூ. 2.5 மில்லியனை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை முடிவுகள் உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவடன கடந்த 2021 திசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலைகாரக் கும்பலால் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேலாக அவர் இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, அவருடைய இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading